இந்தியா

வர்த்தகர்களுக்கு பிணையின்றி ரூ.50 லட்சம் கடன் – தேசிய வர்த்தகர் நல வாரியம் : சிறுதொழிலை மேம்படுத்த பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!

டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது.

முந்தைய காங். ஆட்சி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில்வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது.

கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. நாங்கள் ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தில் கடனை உடனடியாக வழங்கி வருகிறோம். வர்த்தகர்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

உங்களின் ஓய்வில்லாத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்த பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close