இந்தியா

பாகிஸ்தானை நடுநடுங்க விட்ட மத்திய அரசின் அறிவிப்பு? ஒட்டுமொத்த எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை!

பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.

எல்லைத் தாண்டி செல்லும் சரக்கு வாகனங்களில் ஆயுதங்கள், போதைப் பொருள், கள்ளநோட்டுகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கணிசமான கடத்தல் பொருட்கள் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மூலமாகவே இந்தியாவுக்குள் வருவதாகவும், இவை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களுக்குப் பயன்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 
எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. 

இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது  என்று அந்த அறிவிப்பில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close