செய்திகள்தமிழ் நாடு

தாறுமாறாக ஓட்டி வந்து வாகனத்தை துணை ஆய்வாளர் மீது மோதிய தி.மு.க வேட்பாளரின் மகன் : தேர்தல் முடிந்து மீண்டும் தலையெடுக்கும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் கலாநிதி விராச்சாமி. இவரின் மகன் சித்தார்த் (20 வயது), போக்குவரத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்று தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

காலை சுமார் 10.45 மணியளவில் சித்தார்த் ஒட்டிக்கொண்டு வந்த வாகனம் ஜெயபாலன் என்ற துணை ஆய்வாளர் மீது மோதியது. வாகனத்தை தாறுமாறாக ஒட்டிக்கொண்டு வந்த காரணத்திற்காக ஐ.பி.சி 279 மற்றும் 337 பிரிவுகளின் கீழ் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த துணை ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகிறது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தி.மு.க-வினரின் அட்டூழியங்கள் மீண்டும் தலையெடுப்பது பொது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close