2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

பாஜகவின் தேர்தல் பிரசார பாடல்களை யூ-ட்யூபில் கோடிக்கணக்கானோர் ரசிப்பு: காங்கிரஸ் பாடல்களுக்கு 1 லட்சம் பேர்தானாம் !!

லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல் கட்சிகள், ‘யூ டியூப்’ சமூக வலைதளத்தில், பாடல்களை பதிவேற்றம் செய்கின்றன. இதில், பா.ஜ., பாடல்களை அதிகபட்சமாக, ஒரு கோடி பேர் பார்த்துள்ளதாகவும், காங்கிரஸ் பாடல்களை 1 லட்சம் பேர் மட்டுமே பார்வையிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு விதமான பிரசார யுக்திகளை பயன்படுத்துகின்றன.பா.ஜ., சார்பில், ‘சலோ பிர் ஏக் பார் மோடி சர்கார் பனாதே ஹே’ என்ற ஹிந்தி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘வாருங்கள், மீண்டும் ஒரு முறை மோடி அரசை உருவாக்குவோம்’ என்ற பொருளில் உள்ள, இந்த பாடலை, பா.ஜ.,வின், யூ டியூப் பக்கத்தில், 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அதேநேரம், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான, லட்சுமி துபே என்ற, 29 வயது பெண் பாடகி, மோடி ஆதரவு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல், பா.ஜ.,வின் 

அதிகாரப்பூர்வ பாடலை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது.’மீண்டும் மோடியை கொண்டு வர வேண்டும்’ என்ற பொருளில் உள்ள,ஹிந்தி பாடலை, 40 லட்சத்திற் கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த பாடல், ஹிந்துத்வா ஆதர வாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் சார்பில், பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர், ஜாவித் அக்தர் எழுதிய பாடல், யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. ‘அப் ஹோகா நியாய்’ என்ற ஹிந்தி ஸ்லோகனில்,’இப்போது நியாயம் கிடைக்கும்’ என்ற பொருளில் பாடல் உள்ளது. ‘நானும் இந்தியன் தான்’ என்ற பொருளில், ‘மே ஹி தோ ஹிந்துஸ்தான் ஹூன்’ தலைப்பில் வரும், இந்த பாடலை, ஒரு லட்சத்துக்கும் குறைவானோர் தான் பார்த்துள்ளனர்.

ஆந்திராவில், தேர்தல் முடிந்தாலும், ஜெகன் மோகனின், ‘ஜெகன் வருகிறார்… நமக்கு ஜெகன் வேண்டும்’ என்ற பொருள்படும், ‘ரவாலி ஜெகன்… கவாலி ஜெகன்’ என்ற பாடல், யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது. 

பீஹாரில், அரசியல் கட்சிகளை கலங்க அடித்து வரும், கம்யூ., வேட்பாளரும், டில்லி, ஜே.என்.யூ., மாணவர் சங்க முன்னாள் தலைவருமான, கன்ஹையா குமாரின் பிரசார பாடல்கள், இளைஞர் களிடம் துாள் பறக்கிறது.’கன்ஹையா குமார் வருகிறார் ஒவ்வொருவருக்கும் செங்கொடியின் சலாம்’ என்ற பொருளில், ‘ஆயா ரே, ஆயா ரே, ஆயா ரே, கன்ஹையா குமார்… ஹர் மன் லால் சலாம்’ என்ற பாடல், பீஹார்இளைஞர்களை வசீகரிக்கிறது.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் முதல்வர், கமல்நாத் தனியாக பிரசார பாடல் வெளியிட்டு உள்ளார். தேசத்தின் இதயப்பகுதி யில் இருந்து, டில்லி வரை என்ற, ‘தேஷ் கே தில் ஸே தில்லி தக்’ என்ற பாடல் அங்குள்ள காங்கிரசாரிடம் பிரபலமாகியுள்ளது.இதேபோல, உ.பி.,யில் அகிலேஷ் யாதவ்; காஷ்மீரில் உமர் அப்துல்லா; குஜராத்தில் அமித்ஷா என, பலருக்கும் தேர்தல் பிரசார பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன; அவை, பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. என்றாலும் கோடிக்கணக்கான இணையதள வாசிகளின் உள்ளங்களை கவர்ந்தது பாஜக பாடல்கள்தான் என யூ-ட்யூப் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2259252
Tags
Show More
Back to top button
Close
Close