2019 தேர்தல்அரசியல்இந்தியா

ஹர்திக் படேல் கன்னத்தில் பளார் என்று அறை விட்டது ஏன்? அடித்தவர் விளக்கம் !

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவரும், பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான ஹர்திக் படேலை திடீரென ஒருவர் கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் அறைந்தவரான தருண் குஜ்ஜார் தன் கோபத்துக்கான காரணம் என்ன என்பதை ஊடகங்களுக்கு விளக்கினார். “ படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் தலைமையில் வீதியில் இறங்கி போரட்டம் செய்த காலக்கட்டத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இவர்களின் போராட்டத்தினால் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று ஒருவருக்கும் தெரியாது. அப்போதே முடிவெடுத்தேன். ஹர்திக் படேலுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதேபோல், படேல்கள் ஊர்வலம் சென்ற தினத்தில் நான் என் குழந்தைக்கு மருந்து வாங்க முடியாமல் தவியாய் தவித்தேன், அனைத்துக் கடைகளும் இவரால் அடைக்கப்பட்டிருந்தன. அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கடையடைக்கச் சொல்வாரா? யார் அவர், குஜராத்தின் ஹிட்லரா? அதனால்தான் உரிய வாய்ப்பு கிடைத்ததும் ஓங்கி ஒரு அறைவிட்டேன்” என்றார். https://tamil.thehindu.com/india/article26885925.ece

Tags
Show More
Back to top button
Close
Close