2019 தேர்தல்அரசியல்இந்தியா

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார் ப.சிதம்பரம்: மத்திய அரசு அதிகாரி சரமாரி குற்றச்சாட்டு!! தேர்தல் ஆணையத்துக்கும் புகார்!

டெல்லி நொய்டாவில் தற்போது பணியாற்றும் வருமான வரித்துறை ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா நேற்று காரைக்குடியில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடு பட்டு வருகிறார். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்கிறார். அதைத் தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரியோ, அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

மேலும், கார்த்தி சிதம்பரம் தனது வேட்புமனுவில் உண்மையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை. அதேபோல் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றதை யும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரத்தின் மீது தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பி யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் பாலாஜி, டி.எஸ்.பி. அருண் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸார், அனுமதியின்றி செய்தியாளர் களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். இதை யடுத்து எஸ்.கே.வஸ்தவா பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close