2019 தேர்தல்அரசியல்இந்தியா

கேரளாவில் பிரதமர் மோடி கூட்டத்தில் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!! ஒழுங்கு தவறிய போலீசிடம் விசாரணை !

கேரளாவில் வரும் 23 ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கு உச்சக்கட்டம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி  பிரச்சாரம் செய்ய நேற்று  திருவனந்தபுரம் வந்தார். 

மத்திய ஸ்டேடியத்தில் மோடி பிரச்சாரத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பிரச்சார மேடை அருகே இறங்கினார். அப்போது பிரச்சார மேடை அருகே சிறிது நேரத்தில் பாதுகாப்புக்காக கொல்லம் ஏ ஆர் கேம்ப் ஆயுதப்படை போலீசார் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு போலீசார் திடீரென தனது துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி சப்தத்தை கேட்ட மக்கள் திடீர் என அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close