இந்தியா

பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி – உணவு பணவீக்கம் பூஜ்ஜியத்தை தொட்டது..!

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 12 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த பணவீக்க விகிதம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பொருளாதார கொள்கையால்  தற்போது 3.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முழக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 2014 தேர்தலில் பாஜகவின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்பதுதான். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பணவீக்கம் படிப்படியாக குறையத்தொடங்கியது. விலைவாசியும் கட்டுப்பதுத்தப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு பணவீக்கம் இரட்டை இலக்க அளவை எட்டியது. விலைவாசி விண்ணை எட்டியது. பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவான 12 சதவிகித்தைத் தாண்டியது. 2014ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பண வீக்கம் ஊசலாட்டத்துடனே காணப்பட்டது. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் அடிப்படை விலைவாசி குறைந்தது, தனிநபர்களின் சேமிப்பு அதிகரித்தது, செலவினங்கள் குறைந்தது இது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறனால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் 5. 21 சதவிகிதமாக இருந்த பணவீக்க விகிதம் 5.07 சதவிகிதமாக குறைந்து பின்னர் கைகொடுத்த பருவமழையால் அதிகரித்த விவசாய உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பால் படிப்படியாக குறைந்தது. தற்போது உணவு பணவீக்கம் 0.3 (https://tradingeconomics.com/india/food-inflation) என்ற அளவில் உள்ளது. இது இதுவரையில் நிகழ்த்தப்படாத சாதனையாக பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close