2019 தேர்தல்அரசியல்இந்தியா

உயிருள்ளவரை ஓட்டு போட்டுக் கொண்டே இருப்பேன் !! 110 வயது மூதாட்டி தளராத நம்பிக்கை!

நாடாளுமன்ற தேர்தலில் ஹாவேரி தொகுதியில் 110 வயதில் ஓட்டுப்போட மூதாட்டி தயாராக இருக்கிறார். தனது உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கதக் மாவட்டம் ரோன் தாலுகா அகாரி கிராமத்தை சேர்ந்த 110 வயது மூதாட்டி நாகம்மா  கடந்த 1952-ம் ஆண்டு நமது நாட்டில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் நாகம்மா ஓட்டு போட்டு இருந்தார். அந்த தேர்தலில் இருந்து கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டசபை தேர்தல் வரை நாகம்மா தவறாமல் ஓட்டுப்போட்டுள்ளார்.

இதுகுறித்து நாகம்மா கூறியதாவது:- இதுவரை நான் தவறாமல் ஓட்டுப்போட்டு வந்துள்ளேன். எனது உடல் நிலை சரியில்லாததால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஆனாலும் நடைபெற உள்ள தேர்தலில் நான் ஓட்டுப்போட தயாராக இருக்கிறேன். என் உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்க மாட்டேன். இவ்வாறு நாகம்மா கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close