இந்தியா

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு ரூ.78,110 கோடி – தொடர் முன்னேற்றம் கண்டு சாதனை.!

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, மார்ச் மாதத்தில் ரூ.78,110 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள், இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

பங்கேற்பு ஆவணங்கள் என்பது இந்திய பங்குகளை தம் வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டு உபகரணங்கள் ஆகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, செபி அமைப்பில் பதிவு செய்து கொள்ளாமலேயே இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளை வாங்க இவை அனுமதி அளிக்கின்றன.

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, நடப்பு ஆண்டு ஜனவரியில் ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அது ரூ.73,428 கோடியாக இருந்தது. மார்ச் மாதத்தில் இவ்வகை முதலீடு ரூ.78,110 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

மார்ச் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மொத்த அன்னிய முதலீட்டில் பங்குகளின் பங்கு மட்டும் ரூ.56,288 கோடியாகும். கடன் சந்தைகளில் ரூ.20,999 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீத முதலீடு முன்பேர வணிக சந்தையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close