இந்தியா

பா.ஜ.க-விற்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னவர்கள் மீது தாக்குதல் – பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்த தி.மு.க : அரங்கேற்றிய மிருகத்தன செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தி.மு.க., வினரால் தாக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களை பார்த்து ஆறுதல் கூறிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க.வை பயங்கரவாத இயக்கமாக பார்த்து தமிழக மக்கள் அதனை புறந்தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல் போட்டி இருந்தது. ஓட்டுச்சாவடியை கைபற்றுவது போன்ற சம்பவங்கள் இங்கு நடந்தது இல்லை. துரதிர்ஷ்டவசமாக தி.மு.க., கூலிப்படையினர் அருமநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் பா.ஜ., தொண்டர்களை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பா.ஜ., வுக்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னதற்காக ஆரல்வாய்மொழியில் சுப்பையா என்பவரை தாக்கியுள்ளனர்.

மிருகத்தனமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.தி.மு.க., வினர் கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர். இதை ஊடகங்கள் காட்டியுள்ளது.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அரசியல் ஆதாயம் தேடும் செயலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார்.

இதை விட ஒரு அவமானம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க முடியாது. மகா மட்டரகமான அரசியல். இந்த நிலை மாற வேண்டுமெனில் தமிழக மக்கள் தி.மு.க., வை பயங்கரவாத இயக்கமாக பார்த்து புறந்தள்ள வேண்டும். தேர்தல் முடிந்தாலும் ஆட்சியை பிடிக்கணும், உள்ளாட்சியை பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். தி.மு.க.வின் இந்த கனவை தகர்த்து எறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close