2019 தேர்தல்இந்தியாசெய்திகள்

சென்னை – செங்கல்பட்டு – அரக்கோணம் – இடையே சுற்றுவட்ட ரயில் சேவை விரைவில் தொடக்கம்: புறநகர் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது !

சென்னை புறநகர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னைக்கு சுற்றுவட்ட ரயில் விட வேண்டும் என்பதுதான். எதிரெதிர் திசைகளில் ரயில் சேவை தொடங்கும்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் பயணம் செய்ய முடியும்.

இச்சேவை தொடங்கும்போது நாட்டிலேயே மிக நீண்ட தூரமுள்ள அதாவது 194 கி.மீ. சுற்றுவட்டப் பாதையாக இது அமையும்.
பொதுமக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையான  சுற்றுவட்டப்பாதை திட்டம் நிறைவேறாமல் இருந்ததற்கு அரக்கோணம் -தக்கோலம் இடையேயான பாதை மின்மயமாக்கப்படாததுதான் காரணம். தொய்வடைந்த இப்பணிகள் பிரதமர் மோடி அரசின் வேக நடவடிக்கைகளால் கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளநிலையில், விரைவில் சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை துவங்க உள்ளது.
 

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இப்பாதையில்,  தற்போது திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரயில், செங்கல்பட்டு-அரக்கோணம் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. 

 சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை அதிகபட்சமாக 35 கி.மீ. கொண்டதாக மட்டுமே இருக்கிறது. (கொல்கத்தா புறநகர் ரயில்வே) தக்கோலம்-அரக்கோணம் பாதையில் பணிகள் முடிந்து, சுற்றுவட்டப்பாதையில் ரயில் சேவை தொடங்குவது மூலமாக, மிக நீண்ட ரயில்வே சுற்றுப்பாதையாக (194 கி.மீ.) சென்னை புறநகர் ரயில்வே மாறும் என்றார் அவர்.

பயணிகளுக்குக் கிடைக்கும் பலன்கள்:

 இந்த சுற்றுவட்டப்பாதை ரயில், சென்னை சென்ட்ரலில்  இருந்து திருவள்ளூர், அரக்கோணம்,  தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும்.  இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர்,வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் பல கி.மீ. அளவுக்குக் குறையும்.

இந்த புதிய ரயில் பாதை மூலம் காவேரிபாக்கம், ஒச்சேரி, திருமால்பூர் உள்ளிட்ட சில கிராம மக்களும் ரயில் வசதியை பெறுவார்கள்.

திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து பயணிகள் சென்னை சென்ட்ரல் அல்லது கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து,செங்கல்பட்டுக்குச் செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும். இது சுமார் 106 கி.மீ. தூரமாகும். ஆனால், திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டுக்கு அரக்கோணம் வழியாகச் செல்ல வேண்டும் என்றால் வெறும் 96 கி.மீ. தூரம்தான். இதன் மூலம் பயண நேரம் 40நிமிஷம் குறையும். 
இதுபோல, வண்டலூர், மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் வர வேண்டும் என்றால் அவர்கள் இதுவரை பேருந்துப் பயணத்தையே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இந்த புதிய ரயில் பாதை மூலம் இந்தப்பகுதி மக்கள் ரயில் பாதையை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும்.

மின்மயமாக்கல் திட்டங்களுக்கு தற்போதைய மோடி அரசு தந்து வரும் முக்கியத்துவத்தால், தேக்க நிலையில் இருந்த பல்வேறு மின்மயத் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேகமெடுத்தன. அதில் இதுவும் ஒன்று. பெருநகர வளர்ச்சியின் போக்குவரத்து தேவைக்கு நிச்சயம் ஈடுகொடுக்கும் இந்தத்திட்டம் என்றும் பயணிகள் நல அமைப்பினர் பலர் கூறினர். . 

Tags
Show More
Back to top button
Close
Close