தமிழ் நாடு

உச்சத்தில் நாமக்கல்.. குறைந்தபட்சத்தில் தென் சென்னை – தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது.

வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்குச்சாவடிக்குள் சென்று ஓட்டுப் போட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். முதல் முறையாக ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாநிலம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

மத்திய சென்னையில் 57.86 சதவீத வாக்குகளும், வட சென்னையில் 61.76 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவாயின.

Tags
Show More
Back to top button
Close
Close