இந்தியா

பாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.? பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், தவுலிகர்கா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில், இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒருவன் பலத்த காயமடைந்தான். அவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் வர்கீஸ் மற்றும் லிங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. எம்எல்ஏ மாண்டவி மற்றும் பாதுகாவலர்களை கொன்றதில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close