மசூதிகளில் ஆண்களைப்போல் கட்டுப்பாடின்றி பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

மசூதிகளில் உள்ள பாலின வேறுபாட்டுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்துள்ளதாக, புனேவை சேர்ந்த யாஸ்மீ ஜூபேர் அஹமத் பெர்ஷிடே தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

குர் ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு காட்டவில்லை என்றும், உண்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், சபரிமலை தீர்ப்பின் காரணமாக, இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசு, மத்திய வக்பூ வாரியம் மற்றும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Share