2019 தேர்தல்அரசியல்இந்தியா

4 தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் கண்காணிப்பு : வாக்காளர்கள் அஞ்சாமல் ஓட்டளிக்க வர வேண்டும் !! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

தமிழகத்தில் நாளை ( 18 ம் தேதி ) நடக்கவிருக்கும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாஹூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற போலீசார் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஓட்டுப்பதிவு வெப்காஸ்டிங் உள்ளிட்ட 4 தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தேர்தல் கண்காணிக்கப்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும். மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வேலூரில், கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிகாரி; இது வரை 4,400 எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருமான வரித்துறையினர் , பார்வையாளர் ரிப்போர்ட்டின்படி, செலவின பார்வையாளர்கள் அளிக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் பாரபட்சம் இல்லை. எம்.எல்.ஏ., விடுதியில் கூட ரெய்டு நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டருக்கு வந்த புகாரின் அடிப்படையிலேயே கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவில் ஆண்டிப்பட்டியில் சோதனை நடந்தது. முழு ரிப்போர்ட் வரவில்லை. வந்த பின் உரிய முடிவுகள் எடுக்கப்படும். தமிழகத்தில் 12 லட்சம் பேர் முதல் முறையாக ஓட்டளிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் தவறாமல் அச்சமின்றி ஓட்டளிக்க வர வேண்டும். இவ்வாறு சாஹூ கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close