கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க வேட்பாளர் கேபி முனுசாமியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுகூட்டத்தில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி பேசியபோது, முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், மெரினாவில் அடக்கம் செய்திட, சட்ட சிக்கல்கள் இருந்ததால் தான், இடம் ஒதுக்கவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள், இரவோடு இரவாக வாபஸ் பெறப்பட்டது எப்படி என்று, ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த சாதிக் பாட்ஷா, உள்ளிட்ட மர்ம மரணங்கள் பற்றி, அ.தி.மு.க அரசு மீண்டும் விசாரணையை தொடங்கும் எனவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர், எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

Share