2019 தேர்தல்அரசியல்இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்வு

நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வு பெறவுள்ளநிலையில், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்நிலையில், ஒட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் வரும் மே மாதம் 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு பிறகு ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags
Show More
Back to top button
Close
Close