சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ காட்சியில் கமல்ஹாசன் முதலில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். 

அதில் மு.க.ஸ்டாலின், மோடி, ஓ.பன்னீர்செல்வம், எச்.ராஜா ஆகியோரது குரல்கள் கேட்கும்.  உடனே ஆவேசம் அடையும் கமல், ரிமோட்டை வீசி எறிந்து டிவி பெட்டியை உடைத்துவிட்டு, மக்களிடம் கேள்வி எழுப்பி தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்பது போல் அமைந்திருக்கும்.

இந்த வீடியோவில் பல்வேறு தலைவர்கள் குரல் கேட்டவுடன், கமல் டிவியை  உடைப்பது போல் அமைந்திருந்ததால் சர்ச்சையானது. இதனால், தேர்தல் ஆணையம் சில வார்த்தைகளின் ஒலி, காட்சியை நீக்கச் சொல்லியது. இதைச் செய்வதற்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Share