சிவகங்கை அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி பாண்டியன் காரைக்குடியில் வாக்கு சேகரித்தார் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய வேட்பாளர் தேர்போகி பாண்டியன் கார்த்திசிதம்பரத்தின் குடும்பத்தினரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன் குடும்பம் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் குடும்பம், தற்போது ஜாமீனுக்கு அலையும் குடும்பம் என்று கூறப்படுவதாக காரைக்குடியில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய ராகுலிடம் பேசுவேன் என சொல்லும் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வு வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடி பெற்றவர் என்றும் குற்றஞ்சாட்டினார் தேர்போகி பாண்டியன்.

Share