இன்று சித்திரை முதல் நாளில் ஸ்ரீ விகாரி தமிழ் புத்தாண்டு பிறப்பு, இத்துடன் அறிவுச்சுடர், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று. இந்த அரிய நாளில் தனது முதலாண்டை சிறப்புடன் நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் வெற்றிப் படிகளில் தடம் பதிக்கிறது ‘ கதிர் ‘ பத்திரிகை.

கிட்டத்தட்ட 40,000 வாசகர்கள், 6௦௦௦ டுவிட்டர் தொடர்பாளர்களுடன் தனது வளர்ச்சியில் முத்திரை பதித்து வளர்ந்து வரும் சிறந்த தமிழ் தேசீய பத்திரிகையான ‘கதிர்’ ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி சிறக்க நம் அனைவரின் நல வாழ்த்துக்கள்

Share