2019 தேர்தல்அரசியல்இந்தியா

ராம நவமியில் ராமநாதபுரத்தில் வில் அம்பு ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கிய மோடி!

ராமநவமி நாளன்று இந்த புனித பூமிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் காசியும் ராமநாதபுரமும் இணைக்கப்பட்டு உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

மீனவர்கள் நலனுக்காக மே 23-ந்தேதி வெற்றி பெற்ற பிறகு மீன் வளத்துறை அமைச்சகம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கான கிஷான் அட்டை மீனவர்களுக்கும் வழங்கப்படும்.

தேர்தலுக்கு பிறகு நான் பிரதமராக பொறுப்பு ஏற்றதும் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

நாட்டில் ஏழ்மை இல்லாத நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம்.

அப்துல்கலாம் இருந்து இருந்தால் மிஷன் திட்டம் குறித்து மகிழ்ச்சி அடைந்து இருப்பார். கலாமின் கனவுகளை நனவாக்கி இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்லவேண்டும்.

இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முகையூர் பூம்புகார் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.

துறைமுகங்களின் மூலம் வளர்ச்சி அடைய முடியும் என தேசிய ஜனநாயக கூட்டணி நம்புகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக்கப்படும்

நாட்டின் அழிவு மனப்பான்மையில் எதிர் அணியினர் இருக்கின்றனர். நாட்டின் மேம்பாடு தான் பாஜக கூட்டணியின் குறிக்கோளாக உள்ளது.

எதிர்கட்சிகள் நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள்.

மோடியை வெறுக்கிறோம் என்று கூறி எதிர்க்கட்சிகள் நாட்டையே வெறுக்கிறார்கள்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோது நாட்டின் ராணுவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவமதித்தது.

சபரிமலை விவகாரத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் நாட்டின் கலாசாரத்தை அழிக்க நினைக்கின்றன.

நீர் மேலாண்மைக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
காங்கிரஸ் மற்றும் திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன.

முத்தலாக் முறை தடை செய்யப்பட்டதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை மீட்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக அரசு உரிய உரிமையை கொண்டு வந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தாக்கியபோது அமைதியாக இருந்தார்கள். இந்தியாவில் ஒரு தீவிரவாதியை கூட அனுமதிக்க முடியாது.

நாட்டுக்காக உழைத்த தலைவர்களை போற்ற காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை. நாட்டில் ஒரு குடும்பம்தான் அனைத்தையும் செய்ததாக காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் ஒரு குடும்பத்திற்கு மட்டும் நினைவுச் சின்னங்களை எழுப்பினார்கள்.

நீங்கள் 18-ந்தேதி காங்கிரசிற்கோ, திமுகவுக்கோ, முஸ்லீம் லீக்கிற்கோ வாக்களிப்பீர்களானால் அதிக வரி விதிப்பிற்கும் குறைந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

நீதியை பற்றி பேசும் காங்கிரஸ் அநீதியை ஏற்படுத்தி இருக்கிறது என கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close