2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் சந்தோசம் மலர வழி பிறந்தது !! யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமரும் மோடி தான்

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போரினால் யாழ்பாணம், காங்கேசன் துறைமுகம் உட்பட அனைத்து பகுதிகளுமே சீரழிந்து போயின. ஏராளமான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், பிழைக்கும் ஆதாரங்களையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் சோகத்துடன் வாழ்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு உள்ள நிலைமைகள், குறிப்பாக மோடி அரசு இந்திய பிரதமராக பதவி ஏற்றப்பின் அங்குள்ள தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து யாழ்பாணத்தில் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சரவணன் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டுடன் இலங்கை தமிழர் பகுதிகளில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுற்றது. போர் முடிவு பெற்றாலும் அங்குள்ள மக்கள் பிழைக்க ஆதாரமின்றியும், வீடுகளை போரில் பறி கொடுத்தும் உள் நாட்டிலேயே அகதிகளாக மாறினார்.

இந்த நிலையில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, வீடிழந்த தமிழர்களுக்கு 50,௦௦௦ வீடுகள் கட்டிக் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி முழுமையாக கட்டிக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவி ஏற்ற மோடி அடுத்த சில மாதங்களில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை வந்து நம் தமிழர்களை பார்த்தார். இந்திய அரசு முன்பு ஒப்புக் கொண்ட முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

முதன் முதலாக இலங்கை தமிழர்களின் மண்ணை மிதித்த பிரதமர் மோடிதான். அவர் எங்களை பார்க்க வந்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் இயக்கப்படுகின்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். இந்ததிட்டத்தின் மூலம் இந்தியா ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த திட்டம் எங்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. இந்த திட்டம் மூலம் ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, வேலை வழங்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்றபோது தமிழர் பகுதிகளில் உள்ள இரயில் பாதைகள் சீரழிந்தன. அவற்றை சரி செய்து புதிய இரயில்களை சென்னை ஐசிஎப் லிருந்து தருவிக்கப்பட்டு இப்போது ரயில்கள் இயங்குகின்றன. இதற்காக மட்டும் மோடி அரசு 2530 கோடி செவிட்டுள்ளது. இங்குள்ள காங்கேசன் துறைமுகமும் போரினால் சேதமுற்று பயனின்றி கிடந்தது.

பிரதமர் மோடி இந்த துறைமுகத்தை பார்வையிட்டு ரூ.288 கோடி நிதி ஒதுக்கி மறு சீரமைப்பு செய்து தந்துள்ளார். இதில் இப்போது நான்கு கட்ட பணிகள் முடிந்துள்ளன. இதனால் இங்குள்ள பல தமிழர் பகுதிகள் தற்போது மீண்டும் வாழ்க்கை ஆதாரங்களை பெறவுள்ளன.

அடுத்தாற்போல வடகிழக்கு மாகாண தமிழர்கள் மட்டுமன்றி மலை பகுதிகளில் வாழ்ந்து வரும் தேயிலை தோட்ட இந்திய வம்சாவழி தமிழர்களின் நலனுக்காகவும் மோடி அரசு 55,௦௦௦ வீடுகள் கட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டது.  கடந்த 2018 ஆம் ஆண்டு 2- ஆம் முறையாக இலங்கை வந்த பிரதமர் மோடி மலையக தமிழர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளில் 400 வீடுகளை முதல் தவணையாக வழங்கினார். யாழ்பாணம் பகுதிகளிலும் மேலும் வீடுகள் கட்டித்தர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடு எனது மனைவி பெயரிலும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வீடு வசதிகளுடன் கட்டித்தரப்பட்டதால் வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாகவும், இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என்றும்  பெருமையாக கூறினார் சரவணன்.      

Tags
Show More
Back to top button
Close
Close