ராமநவமி நாளில் ராமநாதபுரம் வந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக பிரதமர் மோடி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு எவ்வித கொள்கையும் கிடையாது. அவர்கள் இரவும், பகலும் மோடியை அகற்ற வேண்டும் என்றே கோஷம் எழுப்புகின்றனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் லாபத்திற்காக ராணுவத்தை அவமானப்படுத்தினர். ஓட்டு வங்கி அரசியலுக்காக பண்பாடு, கலாசாரத்தை பயன்படுத்துகின்றனர். இதனை நாம் அனுமதிக்க மாட்டோம்.

முத்தலாக் முறையை தடை செய்ய மசோதா கொண்டு வந்தோம். இதனை திமுக முஸ்லிம் லீக் எதிர்க்கிறது. சபரிமலையில் காங்கிரஸ், கம்யூ., முஸ்லிம்லீக் கட்சிகள் நமது நம்பிக்கையை குலைக்க முயற்சிக்கின்றனர். நமக்கு நாடுதான் முக்கியம். எதிர்கட்சியினருக்கு குடும்பமே முக்கியது. கலாம் ராமேஸ்வரத்தில் நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நாட்டில் உள்ள அனைவரும் கலாமின் பெருமையை அடைய முடியும்.
மிஷன் சக்தி திட்டம் நடந்த இந்நேரத்தில் கலாம் உயிருடன் இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு நினைவுசின்னம் ஏற்படுத்தினரா ? தெற்கையும், வடக்கையும் பிரிக்கும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம்’ என்று கூறியுள்ளார்.

Share