சினிமாதமிழ் நாடு

தேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியான படம் எல்.கே.ஜி. சமகால அரசியலைக் கேளிக்கை செய்த இப்படத்தில் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜே.கே.ரித்தீஷ் இப்படத்தில் ராமராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதிர்பாராத விதமாக இன்று இவர் மாரடைப்பால் காலமானார்.

தற்போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள இவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ராமநாதபுரம் வந்த நிலையில், இவர் போகலூர் பகுதி நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர்து உதவியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரித்தீஷை தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரித்தீஷின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close