இந்தியா

சீனா, ஜப்பானுக்கு அடுத்து நாம தான்.. உருக்கில் முறுக்கி நிற்கும் இந்தியா – அசூரவேகத்தில் வளர்ச்சி காணும் இந்திய பொருளாதாரம்..!

இந்தியாவில், நடப்பு 2019-ஆம் ஆண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என இந்திய உருக்கு சங்கம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

சர்வதேச கச்சா உருக்கு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜப்பான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் உருக்கு துறையின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருக்கிறது. மேலும் இந்தியாவின் 8 முக்கிய துறைகளில் ஒன்றாகவும் இது உள்ளது.

நம் நாட்டில் செயில், ஆர்.ஐ.என்.எல்., டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் ஆகிய 6 நிறுவனங்கள் உருக்கு உற்பத்தியில் முன்னிலையில் இருந்து வருகின்றன. நாட்டின் மொத்த உருக்கு உற்பத்தியில் இந்த நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது.

2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 30 கோடி டன்னாகவும், உற்பத்தியை 25.50 கோடி டன்னாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கச்சா உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக இருக்கிறது.

நடப்பு 2019-ஆம் ஆண்டில், உள்நாட்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக உயரும் என இந்திய உருக்கு சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி 7.1 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத புதிய சாதனை அளவாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 காலண்டர் ஆண்டில் உள்நாட்டு உருக்குப் பொருள்கள் பயன்பாடு 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள உருக்குச் சங்கம் நடப்பு 2019-20 மற்றும் வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டுகளிலும் பயன்பாடு இதே அளவிற்குத்தான் அதிகரிக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close