இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதி ஆண்டில் (2019-20) 7.5 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

முதலீடுகள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் முதலீடு அதிகரிப்பு, நுகர்வோர் சந்தை விரிவடைதல் உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீத அளவுக்கு உயரும் என கணித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீத அளவுக்கு இருக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட தெற்காசியாவுக்கான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் வேளாண் துறை வளர்ச்சி 4 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.தேவையைப் பொருத்தமட்டில் உள்நாட்டு தேவை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும், உணவுப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபி-யில் 1.9 சதவீத அளவுக்குக் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

Share