இந்தியா

‘காங்கிரஸ் அரசு’ பாகிஸ்தானை பார்த்து மிரண்டு போகும்.. மோடி வெற்றி பெற்றால் அனைத்திற்கும் தீர்வு.. இம்ரான்கான் அதிரடி பேட்டி.!

நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கட்டிடங்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டு வீசின.

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள், இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
தொடர்ந்து காஷ்மீர்- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டி அளித்தார்.

அப்போது இம்ரான்கான் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம், பாஜக வெற்றி பெற்றால், காஷ்மீரில் மற்றும் அனைத்து பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close