2019 தேர்தல்அரசியல்இந்தியா

பாகிஸ்தான் பிரிவதற்கு காங்கிரஸ் தான் காரணம் …….

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் அவுசா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், சுதந்திரத்திற்கு முன்னர் காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகியிருக்காது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரி பேசுகின்றன. காஷ்மீருக்கு தனி பிரதமர் பதவி கேட்கும் நபரை காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் ஆதரிக்கின்றன.
பயங்கரவாதிகளை அவர்களது இடத்தில் சென்று அழிப்பதே புதிய இந்தியாவின் கொள்கை. புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்களின் வீர மரணம் குறித்து எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்புகின்றன. பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கு, காங்கிரஸ் இன்னும் எத்தனை ஆதாரங்களை எதிர்பார்க்கிறது
தேசிய பாதுகாப்பு, விவசாயிகள் நலனுக்கு பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவதே எங்களின் நோக்கம். விமான தாக்குதல் குறித்து தேர்தல் அறிக்கையில் நாங்கள் பேசுவதில்லை. ஆனால், தேவைப்படும் நேரத்தில் அதனை செய்தோம். முதல்முறை ஓட்டுப்போடுபவர்கள், பாகிஸ்தான் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில், மக்களின் ஆசியும் நம்பிக்கையுமே பெரிய வேலைகளை செய்ய எனக்கு பலத்தை கொடுத்தது. கடந்த 5 ஆண்டுகளில், உங்களின் நம்பிக்கையே எனக்கு பெரிய பலமாக இருந்தது. மக்கள் சேவகனை மோசமாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கலாம். ஆனால் பணக்கட்டுகள் யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கணக்கில் வராத பணம் பிடிபடுவதால் என் மீது எதிர்க்கட்சிகளுக்கு கடுப்பு இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close