2019 தேர்தல்அரசியல்இந்தியா

“மருதமலை முருகனுக்கு அரோகரா”என்ற கோஷத்துடன் உரையை ஆரம்பித்தார் மோடி..” கோவை பொதுக்கூட்டத்தில்

கோவை: பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசி வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பாஜக, தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையடுத்து கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. இதில் பங்கேற்பதற்காக, இரவு 7 மணியளவில் தனி விமானத்தில் கோவை வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 7.15 மணியளவில் கொடிசியா மைதானத்தில் துவங்கி பொதுக்கூட்டத்தில், அவர் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகிறார். முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close