2019 தேர்தல்அரசியல்இந்தியா

பாஜகவுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி: ஆத்திரம் அடைந்த நக்சல்கள் தாக்குதலில் பாஜக எம் எல் ஏ உட்பட 5 பேர் பரிதாப பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாஜகவுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கால் அங்கு நடைபெற்ற பேரணியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். குறிப்பாக நக்சல்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்றனர்.

 ஏற்கனவே மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, ஆயுத சப்ளை நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த நக்சல்கள் பாஜகவின் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் தங்கள் ஆதிக்க பகுதிகளில் உள்ள மக்கள் பாஜக பேரணியில் பங்கேற்றிருப்பதை கவனித்த மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close