தமிழ் நாடு

மயங்கி விழுந்த சிறுமியை வைத்துக்கொண்டு பிரேயர் செய்த தனியார் பள்ளி – மூளை நரம்பு பாதித்து பரிதாபமாக பலியான சோகம் : பள்ளி தாளாளரின் ஆணவ பேச்சு..!

பள்ளியில் மயங்கி விழுந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு, முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அம்மாணவி உயிரிழந்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினமலர் செய்தி குறிப்பு கூறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 45. இவரது, 11 வயது மகள் காவ்யா. இவர், மைலோடி பகுதியில் உள்ள, விக்டரி மெட்ரிக் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.முதலுதவிகடந்த, 4ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, பள்ளி வாகனத்தில், காவ்யா கிளம்பி சென்றார். அங்கு தேர்வு எழுதிய நிலையில், மதியம், 12:00 மணியளவில், காவ்யாவுக்கு வாந்தி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயார் ஜலஜாவுக்கு தகவல் கொடுத்தது.

சுமார் 45 நிமிடத்துக்குப்பின் பள்ளிக்குச் சென்ற ஜலஜா, மயக்க நிலையில் இருந்த தன் மகளை நெய்யூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, கால தாமதத்தால் மூளை நரம்பு பாதிப்படைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், கால தாமதமாக வந்ததால் காப்பாற்றுவது கடினம் என்று கூறியுள்ளனர். உடனே திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தன் மகளை ஜலஜா கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 5-ம் தேதி காவியா உயிரிழந்தார். இந்த நிலையில், காவ்யாவின் தாய் ஜலஜா, தன் மகள் மயக்கமடைந்த நிலையில் பள்ளி நிர்வாகம் முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதாகப் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து ஜலஜா கூறுகையில், “மனிதாபிமானம் அற்ற நிலையில், தான் பள்ளி செல்லும் வரை ஓர் அறையில் மகளை படுக்க வைத்துள்ளனர். மேலும், முதலுதவி அளிக்காமல் பிரேயர் செய்துள்ளனர். மயங்கிய உடனே பள்ளி நிர்வாகம் சிகிச்சை அளித்திருந்தால், என் மகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. அதைச் செய்யாமல் அறையில் வைத்து பிரேயர் செய்துள்ளனர். முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பிரேயர் செய்திருந்தால் என் மகள் பிழைத்திருப்பார்” என்றார்.

இதுகுறித்து பள்ளி தாளாளர் லெட்டிஷியா ஜாண்சன் கூறுகையில், “குழந்தை மயங்கிய நிலையில் கை, கால்களை அசைத்துக்கொண்டுதான் இருந்தது. வலிப்பு என்று எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவரின் பெற்றோர் வருவதாகக் கூறியதால் நாங்கள் காத்திருந்தோம். மருத்துவமனையில் சேர்க்க கூறியிருந்தால் நாங்கள் சேர்த்திருப்போம்” என்று ஒரு மாணவியின் உயிர் போனதை கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close