தி.மு.க., தில்லுமுல்லு கட்சி. இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர். தர்மம்தான் ஜெயிக்கும். ”பிரதமர் மோடி நல்லவர்;அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேட்டியின் போது கூறினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அறிவுரைப்படி, பிரசாரத்திற்கு செல்லாமல்,தனது விருகம்பாக்கம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கட்சி ‘டிவி’க்கு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் நேற்று சிறிய பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் “ நான் நன்றாக இருக்கிறேன். உடல்நிலை நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் பிரசாரத்திற்கு வருவேன். அங்கே வந்து பேசுவேன். மருத்துவர்கள் அறிவுரைப்படிதான் பிரசாரத்திற்கு வர முடியும்.

அ.தி.மு.க., கூட்டணி தான் ஜெயிக்கும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. தி.மு.க., கூட்டணி தோற்கும். மோடி நல்லவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு, தே.மு.தி.க.,வினர் உழைக்கவேண்டும். நம் கூட்டணி 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு, விஜயகாந்த் பேசி இருப்பதைக் கண்டு, தே.மு.தி.க.,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், விரைவில் பிரசாரத்திற்கு வர இருப்பதாக தெரிவித்து இருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share