தமிழ் நாடு

தேர்தலில் தி.மு.க கூட்டணியை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் – சிவனடியார்கள் எடுத்த ஆவேச முடிவு..? சராமாரியாக சரியும் தி.மு.க..!

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக கூட்டணி தோற்கடிக்க வேண்டி திருப்பூரில் சிவனடியார்கள், திருவாசகம் முற்றோதலுடன், பஞ்சபூத யாக பூஜை நடத்தினர்.

மக்களவைத் தேர்தல் திருவிழா, நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில், இந்துக்கள் அனைவரும், 100 சதவீதம் ஒட்டளிக்க வேண்டுமென, திருப்பூர், சந்திராபுரத்தில் உள்ள, ஆனிலையப்பர் சிவமடத்தில், நேற்று காலை, 7:00 முதல் மதியம், 1:30 மணி வரை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவ வழிபாட்டுடன் துவங்கிய பஞ்சபூத யாகமும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, ஐந்து மணி நேரம், பக்தி நெறியுடன் நடந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளை நிர்வாகி ஒருவர், இதுவரை, தேர்தல் குறித்து, சிவனடியார்கள் சிந்திக்கவே இல்லை. தற்போது, இந்து தர்மத்தை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் பேசி வருகின்றனர்.

அவர்களுக்கு, புத்தி புகட்ட வேண்டிய நேரம், வந்து விட்டது.பண்டைய காலத்தில், நல்லரசு அமைய, பஞ்சபூத யாகம் நிகழ்த்துவர். அதேபோல், இந்து தர்மம் காக்க, இம்மாதம் முற்றோதல் நிகழ்த்தப்படுகிறது. ஆன்மிக உணர்வுள்ள நல்லரசு அமைய, வேண்டுமெனில், இந்துக்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்றும் திமுக கூட்டணியினரை ஜெயிக்க விடாமல் செய்ய வேண்டும் என சிவனடியார் தெரிவித்துள்ளார்

Tags
Show More
Back to top button
Close
Close