இந்தியா

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் வட்டியில்லா கடனுதவி.. பா.ஜ.க., தேர்தல் அறிக்கை வெளியீடு.!

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 75 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். இதில் 75 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

அதில் சில முக்கியமானவைகள்:
5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும்.
அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும்.

2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
சிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags
Show More
Back to top button
Close
Close