தமிழ் நாடு

ராகுலை பிரதமர் வேட்பாளராக சொல்வதற்கு சோனியா காந்தியே விரும்ப மாட்டார்.. ராமதாஸ் பேச்சு.!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அவரின் அம்மா சோனியா காந்தியே விரும்ப மாட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, டாக்டர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: பாமக, அதிமுக-வினருக்கு சூதுவாது தெரியாது.

தமிழ் தமிழ் என்று பேசும் தி.மு.க-வினர் தான், ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தடங்கலாக இருக்கிறார்கள்.

காங்கிரஸ்-, திமுக கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கச் செய்யும் நீட் தேர்வு கட்டாயம் நீக்கப்படும்.

வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும். கருத்துக்கணிப்பில், பா.ஜ.க இடம்பெற்ற கூட்டணி நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்திருக்கிறது.

மோடி தான் மீண்டும் பிரதமராக பதவியேற்பார். தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தோல்வியடையும் என்று தெரியவந்திருக்கிறது.

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று அவரின் அம்மா சோனியா காந்தி கூடச் சொல்லமாட்டார். மு.க.ஸ்டாலின் தாறுமாறாகப் பேசுகிறார். நாகரிகமில்லாமல், முதல்வரை மண்புழு என்கிறார்.

வேலூரில் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. புதுவை உட்படத் 40 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணிதான் வெற்றிபெறும் என்று கள நிலவரம் சொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close