தமிழ் நாடு

ஒழுங்கா பேசுங்க.. காது சவ்வு கிழிந்துடும்.. மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் பழனிச்சாமி.!

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். தன்னுடைய தந்தையின் ஆதரவில் அரசியலுக்கு பின்வாசல் வழியாக ஸ்டாலின் உள்ளே வந்தார்.

நான் அப்படி இல்லை கஷ்டப்பட்டு உழைத்து முதல்வர் பதவிக்கு வந்தவன். ஒரு சாதாரண தொண்டன் முதல்வரானால் அதனை கேவலமாக பேசுவதா.

மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும்.

அரசியலில் என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள். நான் அதற்கு உரிய பதிலை கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close