இந்தியா

பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி கருத்து குறித்து ஊடகங்கள் திரித்து செய்தி வெளியீடு.. பிரதமர் மோடி பதில்.!

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்றில் ‘முதலில் தேசம், அடுத்து கட்சி, தன்னலம் கடைசி’ என்ற தலைப்பில்  எதிர்கட்சிகளின் தன்னல போக்கு குறித்து பொதுவாக எழுதி இருந்தார்.

இந்த கருத்துக்கள் குறித்து எதிர்கட்சிகளுக்கு சாதகமான ஊடகங்கள் பலவாறு சர்ச்சையை கிளப்பின. இந்த நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது பதிலை அளித்துள்ளார்.  

அதில் “ஜனநாயகம் ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும்.

அதே போல் இந்திய தேசியம் என்ற நம் கருத்தாக்கத்தில் ஒரு போதும் அரசியல் ரீதியாக நம்முடன் முரண்படுபவர்களை நாம் தேச விரோதிகள் என்று கருதியதில்லை.

பா.ஜ.க எப்போதும் ஒவ்வொரு குடிமகனின் சொந்த மற்றும் அரசியல் சுதந்திரத் தெரிவு என்பதை கட்டுப்பாடுடன் பா.ஜ.க மதித்தது.

சுதந்திரம், ஜனநாயகம், நேர்மை, நியாயம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் பா.ஜ.க எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது என்றும் முதலில் எனக்கு தேசம், பிறகுதான் கட்சி , அதன் பிறகுதான் நான் என்றும் கூறியிருந்தார்.

அத்வானி அவர்கள் கூறியிருந்த இந்த பொதுவான கருத்துக்களை எதிர்கட்சிகளும், அரசியல் சார்ந்த ஊடகங்களும் பலவாறு திரித்து வெளியிட்டன.

அதில் பா.ஜ.க தங்களுக்கு பிடிக்காதவர்களையும், எதிர்கட்சிகளையும் தேச விரோதிகள் என கூறி வருகிறது. எனவே இதை கண்டித்துதான் அத்வானி இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று பதில் அளித்துள்ளார். அதில் “மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களின் கருத்துகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

முதலில் எனக்கு தேசம், பிறகுதான் கட்சி , அதன் பிறகுதான் நான் என்கிற அவருடைய மந்திர வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அதன்படி நடக்கும் கட்சியினரில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close