இந்தியா

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை எப்போது வெளியீடு ? கட்சி வட்டாரங்கள் சூசகம்.!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

காங்கிரஸ் வெளியிட்ட இந்த அறிக்கை பொய்யும், போலித்தனமும் நிறைந்தவை என பலதரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களில் பலரும் காங்கிரசின் வாக்குறுதிகளை நம்ப கடினமாக இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் (2014), இதே நாளில்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

எனவே, அந்த தேதியை இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close