தமிழ் நாடு

தொடரும் தி.மு.க-வின் ரவுடியிசம் : தட்டிக்கேட்ட முதியவரை நெஞ்சில் எட்டி உதைக்கும் தி.மு.க நிர்வாகி – அராஜகத்தால் அஸ்தமனமாகும் சூரியன்..!

அழகிரி – ஸ்டாலின் மோதல் முதலில் வெடித்த சமயத்தில் அழகிரி கோஷ்டியை சமாளிப்பதற்காகவும் அழகிரியையே மிரட்டுவதற்காகவும் தங்களுக்கு கேடயமாகப் பயன்படுத்துவதற்காகவும் ரவுடிகளையும், கொலை வழக்குகளில் சிக்கியவர்களையும் திமுகவின் முக்கியப் பதவிகளுக்கு சிபாரிசு செய்தார்கள். விளைவு, இப்போது திமுக-வில் பல முக்கியப் பதவிகள் கிரிமினல்கள் கையில் சென்றுள்ளது.

அந்தவகையில் திமுக கூட்டணியை பற்றி விமர்சித்த முதியவர் ஒருவரை, திமுக நிர்வாகி நெஞ்சில் எட்டி உதைக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எருதப்பன்பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், திமுக காங்கிரஸ் கூட்டணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சித்து நண்பர்களிடம் பேசியுள்ளார்.இதுபற்றி அறிந்த திமுகவினர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ள பொன்ராம் என்பவரிடம் இதுப்பற்றி தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊரின் மையப்பகுதியில் இருந்த அந்த முதியவரை கீழே தள்ளி திமுக நிர்வாகி பொன்ராம், சரமாரியாக தாக்கினார்.இப்படி குற்றப் பின்னணி உள்ளவர்கள் எல்லாம் பதவிகளுக்கு வருவதைப் பார்த்துவிட்டு கட்சியின் மூத்த தலைகள் எல்லாம் மிரண்டு போய் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஆதங்கத்துடன் அக்கட்சி தொண்டர்களே கூறுகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close