இந்தியா

மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது – புதிய சாதனை படைத்த மோடி சர்கார்..!

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

GST Revenue collections for the month of March, 2019 crossed Rupees One Lakh Crore and recorded the Highest Collections in the Financial Year 2018-19; For full details, please log on to: https://t.co/KWHtqfTNuz— Ministry of Finance (@FinMinIndia) April 1, 2019

Tags
Show More
Back to top button
Close
Close