சினிமா

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நடிகர் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இயக்குநர் மகேந்திரன் கடந்த 27-ம் தேதி மதியம் 12 மணியளவில் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயக்குநர் மகேந்திரன் தனது 79 வயதில் காலாமானார். இயக்குநர் மகேந்திரன் மறைவையடுத்து அவர் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close