தமிழ் நாடு

அமித்ஷா இன்று தமிழகம் வருகை.. 3 மணி நேரத்துக்குள் 3 தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்.!

அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா இன்று காலை 9. 30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 12. 30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சங்கராபேரி மைதானத்துக்கு செல்லும் அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் பங்கேற்று தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அரிமலம் லேனா விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் அமித் ஷா, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக. வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதை தொடர்ந்து மாலை 5.10 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்கிறார். அமித் ஷாவின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags
Show More
Back to top button
Close
Close