தமிழ் நாடு

ஒரே நாளில் முதல்வர் மற்றும் நயினார் நாகேந்திரன் மீது காலணி, பாட்டில் தாக்குதல்! வன்முறையை தூண்டும் எதிர்கட்சிள்..!

இன்று ஒரே நாளில் பிரச்சாரம் செய்யும் இடங்களில் முதல்வர் பழனிசாமி வேன் மீது காலணி வீச்சு மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது காலணி வீசப்பட்டது. அது அவர்மீது படாமல் தவறி பிரச்சார வேன் மீது விழுந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில், ராமநாதபுரம் எம்பி தொகுதியில் பாஜக சார்பில் போட்டிடும் நயினார் நாகேந்திரன் பெரியபட்டினத்தில் அதிமுக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது பாட்டில் ஒன்று வீசப்பட்டது. அந்த பாட்டில் அருகில் இருந்த திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது தாக்கியது. இதில் காயமடைந்த உடையத்தேவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே நாளில் ஒரே கூட்டணியை சேர்ந்த முதல்வர் பழனிசாமி மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாக்குக்கு பணம் அளிக்கும் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் வசமாக சிக்கும் எதிர்கட்சியினர் கோபமடைந்து வன்முறைகளை தூண்டிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை அடுத்து வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close