இந்தியா

தேர்தலுக்கு முன் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வெளியிடலாம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி திரைக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. படத்துக்கு பி.எம் நரேந்திர மோடி எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

நடிகர் விவேக் ஓபராய் இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் அடுத்த ஏப்ரல் 5 ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 5ம் தேதி பி.எம் நரேந்திர மோடி படம் வெளியாவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன.

இந்தப் புகாரை அடுத்து தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் படத் தயாரிப்பாளர்கள் நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

படத்துக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதி மன்றத்துக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலுக்கு முன் அப்படத்தை வெளியிட ஆட்சேபிக்கும் எந்த காரணங்களும் இல்லை. எனவே திரைப்படத்தை வெளியிடலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close