2019 தேர்தல்செய்திகள்

ஹிந்துத்துவா வாக்கு வங்கியை பார்த்து பயந்து விட்டாரா திருமாவளவன்?

கடந்த ஜனவரி மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பங்கரவாதத்தை எதிர்த்து, ‘‘தேசம் காப்போம் மாநாடு’’ திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் நடந்தது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை அந்த மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின், “தேசம் காப்போம் என்ற தலைப்பில் சனாதானத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்ற முழகத்தை திருமாவளவன் முன்னிறுத்தி உள்ளார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்குமான தேர்தல்.”, என்று பேசினார்.

ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் சேர்ந்து கொண்டு, ஹிந்துக்கள் மீது விதைத்த இந்த வெறுப்பை ஹிந்துக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு, அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக வி.சி.க அறிவித்தது. இந்த நாளில் சென்னையில் ஒரு மாநாட்டையும் வி.சி.க நடத்தியது.

அதில் பேசிய திருமாவளவன், “பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்து இந்து கோவில்கள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக, இந்து கோவில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா?” என்று அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்தார்.

நிலை இப்படி இருக்க, தற்போது தேர்தல் வந்தவுடன், ஹிந்துக்கள் மீது இவர்களுக்கு திடீர் பாசம் வந்துவிட்டது போல் தெரிகிறது. சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளராக விடுதலை சிறுத்தை கட்சிதலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும் வெற்றி பெற வேண்டும் என குருக்கள் முன்னிலையில் சில மந்திரங்களையும் சொன்னார். ஆதரவு அளிக்குமாறும் கேட்டு கொண்டார்.

திராவிட கழக, கி. வீரமணியின் பகவான் கிருஷ்ணர் மீதான தரக்குறைவான கருத்தை அடுத்து, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கும் மனப்பான்மையில் இருக்கையில், ஹிந்துத்துவா வாக்கு வங்கியை பார்த்து திருமாவளவன் பயந்து இது போன்ற நாடகங்களை செய்து வருகிறாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close