சினிமா

அப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

வாகைச்சூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல விருதுகளையும், பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜிப்ரான்.
இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

மேலும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோ’ என்று கூறியுள்ளார்.

அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். விரைவில் அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close