இந்தியா

பா.ஜ.க., வெற்றி குறித்த நம்பிக்கை அதிகரிப்பு.. முதன் முறையாக 39,000 புள்ளிகளை கடந்து நிற்கும் பங்கு சந்தை.. உற்சாகத்தில் இந்திய தொழில்கள்.!

நாடு முழுவது நடத்தப்படும் மக்களவை தேர்தல் குறித்த வெற்றிக்கான கருத்து கணிப்புகள், மற்றும் பாஜகவுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து முதலீடுகளை குவித்து வருவதால் வரலாறு காணாத அளவில் முதன் முறையாக 39,000 புள்ளிகளை கடந்து பங்கு சந்தை சாதனை செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.      

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 39,000 புள்ளிகளை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 39,017.06 புள்ளிகளாகவும், நிப்டி 50 புள்ளிகள் கடந்து 11,700 புள்ளிகளாகவும் உள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்.,01 காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 283.50 புள்ளிகள் உயர்ந்து 38,956.41 புள்ளிகளாகவும், நிப்டி 72.65 புள்ளிகள் உயர்ந்து 11,696.55 புள்ளிகளாகவும் உள்ளன. முக்கிய அம்சங்கள்

10 முக்கிய அம்சங்கள்

1. காலை 10.17 மணியளவில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் உயர்ந்து 38,995 புள்ளிகளாகவும், நிப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,706 புள்ளிகளாகவும் இருந்தது. பின் அது 39 ஆயிரத்தை தாண்டியது.

2. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் அதிக அளவிலான பங்குகளை வாங்கி வருகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரூ.33,980.56 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளன.

3. 2018-19 ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 5704 புள்ளிகளும், நிப்டி 1510 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

4. உலகவில் பணபுழக்கம் மந்த நிலையில் இருந்த போதும் இந்திய சந்தைகள் ஏற்றம் பெற்றத்துடன், உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன.

5. பிரதமர் மோடியும், அவரது பா.ஜ., கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையின் காரணமாக முதலீட்டாளர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

6.மும்பை பங்குச்சந்தையில் உள்ள 19 துறைகளில் 16 துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக உலோகத்துறை பங்குகள் 2.3 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளன. இது தவிர சரக்கு, ஆட்டோ, தொழிற்துறை, அத்தியாவசிய பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் ஆகிய துறைகளின் பங்குகள் 0.6 முதல் 2 சதவீதம் வரை ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

7. அதே சமயம் மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக மின்துறை பங்குகள் 0.3 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.

8. நடுத்தர மற்றும் சிறு தொழில்களின் பங்குகளும் அதிகம் விற்கப்பட்டதால் அவற்றின் மதிப்பு 0.66 சதவீதம் அதிகரித்துள்ளன. சிறு தொழில்கள் 0.88 சதவீதம் உயர்வடைந்துள்ளன.

9.தேசிய பங்குச்சந்தையான நிப்டியை பொறுத்தவரை 34 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், 15 நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

ஹிண்டல்கோ நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 5.47 சதவீதம் உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், கெயில், டாடா ஸ்டீல், லேர்சன் அண்ட் டெர்போ, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.7 முதல் 4.8 சதவீதம் வரை உயர்வுடன் காணப்படுகின்றன.

10. மற்றொரு புறம், இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், கோல் இந்தியா, ஜீ என்டர்டைன்மென்ட், எயிசர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Tags
Show More
Back to top button
Close
Close