இந்தியா

நாடு வளர்ச்சியடைய காங்கிரசுக்கு விருப்பம் இல்லை.. அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி தகவல்.!

‘‘நாட்டின் வளர்ச்சியில் காங்கிரசுக்கு அக்கறை இல்லாமல் உள்ளன’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 11ம் தேதி சட்டப்பேரவைக்கும், மக்களவைக்குக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று முதல் தொடங்கினார்.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு அரணாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இதன் மக்களே காவலாளிகளாக இருந்து நாட்டை பாதுகாத்து வருகின்றனர்.

நாடு சாதனை படைக்கும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே? இந்தியா செய்த சாதனைக்காக ஒவ்வொருவரும் தங்கள் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்ப விருந்தளித்து மகிழ்வீர்கள்.

ஆனால், இந்தியா வளர்ச்சி பெறும் போதும் வெற்றி பெறும் போதும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் அக்கறை இல்லாதவர்களாக உள்ளனர்.

நமது விஞ்ஞானிகள் சாதனை செய்தபோது கூட அவர்களை இகழ சாக்குப்போக்கு தேடுகின்றனர். அவர்களுக்கு வரும் தேர்தலில் நீங்கள் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close