இந்தியா

உத்தரபிரதேசத்தில் திடீர் திருப்பம்.. அகிலேஷ், மாயாவதி கூட்டணியில் இருந்து செல்வாக்குமிக்க மீனவர் கட்சி வெளியேறியது.. பாஜகவில் இணைகிறது.!

மக்களவைத் தேர்தலுக்காக, உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து சந்தர்ப்பவாத மெகா கூட்டணி அமைத்துள்ளன.

முரண்பாடுள்ள இரண்டு கட்சிகளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி உ.பி கிழக்கு பகுதில் செல்வாக்கு மிக்க நிஷாத் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் நேற்று திடீரென சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அகிலேஷ்-மாயாவதியின் மெகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து, யோகி ஆதித்யநாத், தனது கோரக்பூர் மக்களவை தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கோரக்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், அகிலேஷ், மாயாவதி கட்சிகளின் ஆதரவில் போட்டியிட்ட நிஷாத் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close